ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் திருடிய ஓடிசா வாலிபர் கைது

பெங்களூருவில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் திருடிய ஓடிசா வாலிபர் கைது
பெங்களூரு:
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 6-வது செக்டாரில் வசித்து வருபவர் தேவய்யா. இவர், வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் இரவு தேவய்யா சாப்பிட்டுவிட்டு தனது வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் வீட்டின் முதல் மாடிக்கு வந்த ஒரு மர்மநபர் அங்கிருந்த செருப்புகள் மற்றும் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை திருடினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவய்யா, காவலாளிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தேவய்யாவும், காவலாளியும் சேர்ந்து தப்பி ஓடிய அந்த நபரை சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தார்கள். உடனடியாக அவர், எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 41) என்பது தெரியவந்தது. ஓய்வு பெற்ற அதிகாரி தேவய்யா வீட்டில் திருட முயன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும் நகரில் உள்ள குடியிருப்புகளில் வெளியே கிடக்கும் செருப்புகளை திருடி, அவற்றை பாலிஷ் செய்து சிட்டி மார்க்கெட்டில் மனோஜ்குமார் விற்று வந்ததும் தெரியவந்தது. கைதான மனோஜ்குமார் மீது எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story