நெல்லை மாவட்டத்தில் காய்ச்சல் மருந்து விற்க தடை- கலெக்டர் விஷ்ணு உத்தரவு


நெல்லை மாவட்டத்தில் காய்ச்சல் மருந்து விற்க தடை- கலெக்டர் விஷ்ணு உத்தரவு
x
தினத்தந்தி 20 May 2021 7:42 PM GMT (Updated: 20 May 2021 7:42 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து விற்க தடை விதித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, மே:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மருந்து கடைகளிலும் காய்ச்சல் மருந்து விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாராசிட்டமால், அசித்ரோ மைசின் மற்றும் ஐவர் மெக்டின் போன்ற மருந்துகளை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. இந்த மருந்துகளை வழங்கும் போது, அதனை வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை கேட்டு தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். மேலும் மருந்துகள் விற்பனை குறித்த விவரங்களை ஆய்வாளருக்கு தினசரி தெரிவிக்க வேண்டும். இதை செய்யாமல் தவறும் மருந்து கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு முதல் நாளிலேயே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பொது சுகாதார நோய் தடுப்பு சட்டத்தின்படி அந்த ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story