திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு


திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2021 7:49 PM GMT (Updated: 2021-05-21T01:19:02+05:30)

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்

திருமங்கலம்
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். எத்தனை நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு வழங்கும் சிகிச்சைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அரசு மருத்துவர்கள் ராம்குமார், மாதவன் உள்ளிட்ட மருத்துவர்களிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் நகராட்சி ஆணையர் விநாயகதிடம் தினமும் நகர்புறங்களில் செய்யப்படும் தூய்மை செயல் திட்டங்களை கேட்டறிந்தார். கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தவும் மருத்துவரிடம் ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் முருகன், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story