உசிலம்பட்டி பூ சந்தையில் போலீஸ் துணை சூப்பிரண்டு திடீர் ஆய்வு


உசிலம்பட்டி பூ சந்தையில் போலீஸ் துணை சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2021 7:49 PM GMT (Updated: 2021-05-21T01:19:14+05:30)

உசிலம்பட்டி பூ சந்தையில் போலீஸ் துணை சூப்பிரண்டு திடீர் ஆய்வு செய்தார்

உசிலம்பட்டி
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டியில் உள்ள பூ சந்தைக்கு கிராமங்களிலிருந்து ஏராளமானோர் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனால் சந்தையில் தினமும் ஆயிரக்காணோர் குவிகின்றனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த கோட்டாட்சியர் ராஜ்குமார் உத்தரவுப்படி பூ சந்தையில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி கயிறு கட்டப்பட்டு தற்போது பூ விற்பனை நடைபெறுகிறது. இந்தநிலையில் பூ சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா என்பது குறித்து உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் ஆய்வு மேற்கொண்டார். முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களும் வியாபாரிகள் அரசு விதிகளை கடைபிடித்து செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

Next Story