பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் கலெக்டர் சமீரன் ஆய்வு


பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் கலெக்டர் சமீரன் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2021 8:01 PM GMT (Updated: 2021-05-21T01:31:33+05:30)

பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.

பாவூர்சத்திரம், மே:
பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்

பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டில் சுமார் 150 கடைகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் கமிட்டி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி கடந்த 15-ந் தேதி முதல் மூடப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமம் உள்ளது என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று முதல் மார்க்கெட்டில் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்யவும், வியாபாரிகள் வாங்கி செல்லவும் ஏற்பாடு செய்தார். அதனைத்தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களான தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், சேமங்கிழங்கு, பீட்ரூட், வெள்ளரிக்காய், மாங்காய் மற்றும் பல்வேறு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதனைத் தொடர்ந்து இந்த மார்க்கெட்டை தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊரடங்கு நடைமுறைகளை பின்பற்றுமாறும், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

அவருடன் தென்காசி தாசில்தார் சுப்பையன், மகளிர் உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், ஆணையாளர் பார்த்தசாரதி, ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னிவளவன், கூடுதல் ஆணையாளர் திலகராஜ், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், மார்க்கெட் கமிட்டி தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் நாராயணன் சிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story