கடையம் பகுதியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


கடையம் பகுதியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2021 8:06 PM GMT (Updated: 2021-05-21T01:36:19+05:30)

கடையம் பகுதியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

கடையம், மே:
கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர் பழனிகுமாரிடம் கேட்டறிந்தார். மேலும் சுகாதார நிலையத்திற்கு தேவையான கூடுதல் வசதிகள் மற்றும் படுக்கை வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான உதவிகளை தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் விரைவாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சி நகர பஞ்சாயத்து பகுதிக்கு சென்று அங்கு கொரோனா காலத்தில் நடைபெற்றுவரும் நடவடிக்கைகளைப் பற்றி செயல் அலுவலர் சாந்தியிடம் கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து பொட்டல்புதூரில் உள்ள ரேஷன் கடையில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.
இதில் கடையம் ஒன்றிய செயலாளர்கள் அருள்ராஜ், எஸ், வி,முருகேசன், நகர செயலாளர் சங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் புளிகணேசன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கூடல் பீடி தொழிலாளர் நல ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது ஆஸ்பத்திரிக்கு தேவையான வசதிகள் குறித்து தலைமை டாக்டர் பெர்னட்டிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு தேவையான வசதிகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்ரப் அலியிடம் கேட்டறிந்தார். 
பின்னர் முக்கூடல் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கந்தசாமியிடமும் ஆலோசனை நடத்திய மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில் அ.தி.மு.க. பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் டி.கே.சுப்பிரமணியன், முக்கூடல் நகர செயலாளர் வில்சன், பொருளாளர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர்கள் சேவியர் ரஜினி, தளபதி பிரேம்குமார் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் முருகன், வக்கீல் தேவசகாயம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story