முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல்


முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 20 May 2021 8:25 PM GMT (Updated: 2021-05-21T01:55:22+05:30)

முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தால்தார் துரைராஜ் தலைமையில் போலீசார் குன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் வரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முககவசம் அணியாத 140 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.28 ஆயிரமும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் மற்றும் வாகன டிரைவர்கள் 15 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.7,500-ம் என மொத்தம் ரூ.35,500 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Next Story