ஈரோட்டில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னர் அனுமதி- அவசியமின்றி சுற்றுபவர்களுக்கு அபராதம்


ஈரோட்டில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னர் அனுமதி- அவசியமின்றி சுற்றுபவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 May 2021 9:45 PM GMT (Updated: 20 May 2021 9:45 PM GMT)

ஈரோட்டில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது. அவசியமின்றி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது. அவசியமின்றி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
வாகன சோதனை
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்றின் வேகம் கடுமையாக அதிகரித்து வருகிறது. தினமும் காலை 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் திறந்து இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் வாகனங்கள் வந்து செல்ல போலீசார் அனுமதி அளித்து வருகிறார்கள். 10 மணிக்கு மேல் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
காளைமாட்டு சிலை பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, பூந்துறை ரோட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. நேற்று பகல் 10 மணியை கடந்தும் வாகனங்கள் சாரை சாரையாக மாநகர் பகுதிக்குள் வந்து கொண்டு இருந்தன. எனவே அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
இ-பதிவு
ஒவ்வொரு வாகனமாக போலீசார் சோதனையிட்டனர். மேலும், என்ன தேவைக்காக அவர்கள் வாகனத்தில் வெளியே வந்தனர் என்று கேட்டு காரணம் சரியாக இருந்தாலும், இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.
ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்தல், உரிய காரணமின்றி சென்றவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் காளைமாடு சிலை பகுதியில் வாகனங்கள் நெரிசலாக இருந்தது. ஆம்புலன்சுகள் தடை இன்றி செல்ல தனி வழித்தடம் அமைக்கப்பட்டு இருந்தது. வாகன சோதனைக்காக வாகனங்கள் அதிகமாக நிறுத்தப்படும்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே கூடுதலாக சோதனைச்சாவடிகளை அமைத்து போக்குவரத்து வாகனங்களை சோதனையிட்டு ஆங்காங்கே தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story