காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறிச்சந்தை தொடக்கம்


காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறிச்சந்தை தொடக்கம்
x
தினத்தந்தி 21 May 2021 8:40 AM IST (Updated: 21 May 2021 8:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக செயல்பட்டுவந்த காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறிச்சந்தை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அத்தியாவசிய பொருளான காய்கறிகளை தட்டுப்பாடின்றி விற்பனை செய்வதற்காக காஞ்சீபும் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறிச்சந்தை அமைத்து கொடுக்க காஞ்சீபுரம் பெருநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி காஞ்சீபுரம் பெருநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு காய்கறி வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று முதல் ரெயில்வே ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த ராஜாஜி காய்கறிச்சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் செயல்பட தொடங்கியது.

பஸ்நிலையத்தில் தொடங்கப்பட்ட காய்கறி சந்தையில் பொதுமக்கள் யாரும் காய்கறிகள் வாங்க அனுமதிக்காமல் பல்வேறு பகுதிகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் மட்டும் காய்கறிகள் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் செயல்பட ஆரம்பித்த காய்கறி சந்தையை காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் காய்கறி வாங்க அனுமதிக்கப்படாததால் காய்கறி சந்தை வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டது.

மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும் காய்கறிகள் விற்பனையாகாததால் மனவதனை அடைந்தனர்.

Next Story