கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் பேரூராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு


கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் பேரூராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2021 7:17 PM IST (Updated: 21 May 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் பேரூராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு.

திருவையாறு,

திருவையாறு அடுத்த திருப்பூந்துருத்தி பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருப்பவர்களை தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின்அபுபக்கர் பார்வையிட்டார். அப்போது பேரூராட்சி உதவி இயக்குனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் முககவசம் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும் என்றும், உடல்நிலையில் ஏதாவது மாற்றங்கள் தெரியவந்தால் பேரூராட்சி அலுவலகத்தை அனுகவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர்.

Next Story