விக்கிரவாண்டி பேரூராட்சி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு
விக்கிரவாண்டி பேரூராட்சி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், நடுசெட்டி தெரு, சிங்கார முதலி தெரு ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையறிந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்த பகுதிகளுக்கு யாரும் சென்று வர முடியாத படி நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் மூலம் கண்காணித்து வருகிறார்கள். இந்த பணிகளை கடலூர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பேரூராட்சி அதிகாரிகளிடம் தனிமை படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலை உதவியாளர் ராஜேஷ், வரித்தண்டலர் தண்டபாணி, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், மற்றும் நோய் தடுப்பு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story