காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினமான மே 21-ந்தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆய்வு குழு அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.அதேபோல் காஞ்சீபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது.
இதில் போலீஸ் துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலுடன் எதிர்போம் என்று உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.
Related Tags :
Next Story