பழனியில் போலீஸ் சூப்பிரண்டு, திட்ட இயக்குனர் ஆய்வு
பழனியில் ஊரடங்கு கட்டுப்பாடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பழனி:
பழனி பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடு பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நகரின் முக்கிய சந்திப்புகள், நுழைவு பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர். அப்போது அவசியமின்றி வருவோரை பிடித்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா நேற்று காலை பழனிக்கு வந்தார். அப்போது அவர், ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் நகரின் நுழைவு பகுதியில் போடப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, இன்ஸ்பெக்டர் பாலகுரு ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி நெய்க்காரப்பட்டி பகுதியில் ஊரடங்கு விதிகளை வியாபாரிகள் பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்தார். பின்னர் பழனி பாண்டியன்நகரில் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் மக்கள், வீட்டு தனிமையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பிரபாவதி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story