‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்


‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்
x
தினத்தந்தி 23 May 2021 5:57 AM IST (Updated: 23 May 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

சென்னை,

கொரோனா நிவாரண பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி குவிந்து வருகிறது.அந்தவகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை தலைமை செயலகத்தில் ‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவன செயலாளர் எஸ்.வித்யாகர் நேற்று சந்தித்தார். அப்போது கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை அவர் வழங்கினார்.

Next Story