போதுமான மருந்து கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்படும் முதல்-மந்திரி தகவல்


போதுமான மருந்து கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்படும் முதல்-மந்திரி தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 7:52 PM IST (Updated: 24 May 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

போதுமான மருந்து கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை, 

கொரோனா 3-வது அலை உருவானால் அது குழந்தைகளை தாக்கும் என கூறப்படுகிறது. இதை எதிர்கொள்ள மராட்டிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று, குழந்தைகள் கொரோனா- 19 என்ற பெயரிலான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அரசு 18 வயது முதல் 44 வரை உள்ளவர்களுக்காக 12 கோடி கொரோனா தடுப்பு மருந்தை விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளது. ஆனால் மருந்து கிடைக்கவில்லை. ஜூன் மாதத்திற்கு பிறகு கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு கிடைத்தவுடன் தடுப்பு ஊசி போடும் பணி துரிதமாக நடக்கும் என நம்புகிறேன்.

2-வது அலையின் போது நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் இப்போது 3-வது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம். கொரோனாவை தோற்கடிக்கும் முயற்சியில் வெற்றி பெறாவிட்டாலும், தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தி உள்ளோம். இது மாநிலத்திற்கு கிடைத்த வெற்றி தான். 3-வது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நாம் உஷாராக இருக்க வேண்டும். முதல் அலை முதியவர்களையும், 2-வது அலை வாலிபர்களையும் தாக்கியது. தற்போது குழந்தைகள் அச்சுறுத்தலில் உள்ளனர். இவ்வாறு முதல் மந்திரி பேசினார்.


Next Story