திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,120 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,120 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை
கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கொரோனா பரவலைதடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,120 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
மாவட்டத்தில் நேற்று வரை 36 ஆயிரத்து 611 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 29 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
தற்போது 6 ஆயிரத்து 842 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 383 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story