சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த மதகுபட்டி அருகே உள்ள செம்மொழியான் பட்டிணம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து. இவரது மகன் வைரவன் என்ற ஹரிஷ் (வயது 17). இவர் கீழப்பூங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ஹரிஷ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் கீழப்பூங்குடி அருகே பேரணி கண்மாய்க்கரை பகுதியில் சென்ற போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.