கொரோனா தொற்றால் நர்சு உயிரிழந்தார்


கொரோனா தொற்றால் நர்சு உயிரிழந்தார்
x
தினத்தந்தி 26 May 2021 8:47 AM IST (Updated: 26 May 2021 8:47 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ஊசி போடும் பிரிவில் நர்சாக பணியாற்றி வந்தார்.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி (வயது 58). இவர் மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ஊசி போடும் பிரிவில் நர்சாக பணியாற்றி வந்தார். இங்கு பணியாற்றி வந்த டாக்டர், மருந்தாளுனர், நர்சு பார்வதி உள்ளிட்ட 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நர்சு பார்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story