பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்


பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 26 May 2021 9:30 AM IST (Updated: 26 May 2021 9:30 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெரியஓபுளாபுரம் அரசு பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

முகாமையொட்டி அதே பகுதியில் காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்திடும் வாகனங்களின் செயல்பாட்டையும் எம்.எல்.ஏ. டி.ஜெ. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது தேவையான ஆக்சிஜன் இருப்பு உள்ளதா? என டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.


Next Story