பழங்குடியின மக்களுக்கு வீடுகள்


பழங்குடியின மக்களுக்கு வீடுகள்
x
தினத்தந்தி 26 May 2021 9:08 PM IST (Updated: 26 May 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் சிறுவாட்டுக்காடு மலைக்கிராமத்தில் வனத்துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவாட்டுக்காடு மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு வனத்துறை சார்பில் 31 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக வீடுகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது வீடு கட்டும் பணிகள் கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல், வனவர் ரங்கநாதன் ஆகியோர் மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது. 

இதன்மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story