கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தார்.
இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை தடுக்க கிராம ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்திற்குள் 100 சதவீதம் முன்கள பணியாளர்களுக்கும், 25 சதவீதம் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். மேம்படுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 30 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.
உலகளாவிய ஒப்பந்தம் மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும். அப்போது கோவை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் பரிசோதனை முடிவுகளை காலம் தாழ்த்தாமல் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், போலீஸ் துணை சூப்பிரண்டு கள் சிவக்குமார், விவேகானந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story