வேளாண் அவசர சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடியேற்றி ஆர்ப்பாட்டம்


வேளாண் அவசர சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடியேற்றி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 May 2021 11:50 PM IST (Updated: 27 May 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் அவசர சட்டங்களுக்கு எதிராக திருத்துறைப்பூண்டியில் கருப்புக்கொடியேற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி

6 மாதங்கள் நிறைவுபெற்றதையொட்டி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கருப்புக்கொடியேற்றி திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கே. உலகநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தி. மு.க. நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், இந்திய கம்யூனிஸ்டு் நகர செயலாளர் முருகேசன், தி.மு.க. மாவட்ட வர்த்தக பிரிவு துணைத் தலைவர் சிக்கந்தர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கருப்புக்கொடியேற்றி கோஷம் எழுப்பினர்.

திருவாரூர்

திருவாரூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி கருப்புக்கொடி ஏற்றினார். கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகானந்தம், நிர்வாகி சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டு வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் கருப்புக்கொடி ஏற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட

செயற்குழு உறுப்பினர் பழனிவேல், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பவுன்ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி கிளை செயலாளர் எஸ்.லோகநாதன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வி.சிவானந்தம், எஸ்.ரெத்தினவேல், ஏ.ஐ.டி.யூ.சி செயலாளர் பி.ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்

வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனத்தை விற்பதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

நிர்வாக குழுஉறுப்பினர் ரவி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் பூசாந்திரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story