தடுப்பூசி போட வந்த தொழிலாளி லாரி மோதி பலி


தடுப்பூசி போட வந்த தொழிலாளி லாரி மோதி பலி
x
தினத்தந்தி 28 May 2021 2:02 AM IST (Updated: 28 May 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி போட வந்த தொழிலாளி லாரி மோதி பலி

திருமங்கலம்
வாடிப்பட்டி தாலுகா அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ஹரிஹர சுரேந்திரன் (வயது 21). தனியார் நிறுவன தொழிலாளி. திருமங்கலம் அருகே கப்பலூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இவருடைய நண்பர்கள் தடுப்பூசி போட அவரை அழைத்தனர். இதையடுத்து தடுப்பூசி போடுவதற்காக வாடிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது கப்பலூர் அருகே வந்தபோதுஇருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story