3,620 தேங்காய்கள் மறைமுக ஏலம்


3,620 தேங்காய்கள் மறைமுக ஏலம்
x
தினத்தந்தி 28 May 2021 2:02 AM IST (Updated: 28 May 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

3,620 தேங்காய்கள் மறைமுக ஏலம்

மேலூர்
மேலூர் அருகே விநாயகபுரம் என்னுமிடத்தில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் அவர்களுடைய விவசாய பொருட்களை நியாமான விலைக்கு அவர்களது முன்பாகவே மறைமுக ஏலம் விடப்படும். தற்போது தேங்காய் மட்டும் ஏலம் விடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உள்ள நிலையில் நேற்று மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விவசாயிகள் 3,620 தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் 2 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கருப்பையா ஏலத்தைப் பற்றி விளக்கினார். அதிகபட்ச விலையாக தேங்காய் ஒன்று ரூ.8.00- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7.20-க்கும் என வீதம் 3,620 தேங்காய்கள் ரூ.28,064-க்கு ஏலம் போனது.

Next Story