கடையை உடைத்து பணம் திருட்டு


கடையை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 May 2021 2:02 AM IST (Updated: 28 May 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

கடையை உடைத்து பணம் திருட்டு

மதுரை, மே.28-
மதுரை செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(வயது 31). இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். முழு ஊரடங்கையொட்டி இவர் கடையை பூட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது கடையின் பின்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கடையில் இருந்த பலசரக்கு பொருட்கள், பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story