அழகப்பா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி முகாம்


அழகப்பா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 29 May 2021 11:19 PM IST (Updated: 29 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி முகாம் நடந்தது

காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுகாதார மையம் மற்றும் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். 18 வயது முதல் 44 வயது வரையிலான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், பொதுமக்கள் என 380 பேரும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 150 பேரும் என மொத்தம் 530 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story