நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 May 2021 2:14 AM IST (Updated: 30 May 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

தெற்குவெளி வீதி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை,

மதுரை பெருநகர் மின்பகிர்மானத்தில் மழைக்கால பராமரிப்பு பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. எனவே தெற்குவெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பானி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன்கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் என்.மோகன் தெரிவித்து உள்ளார்.

Next Story