அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே இடையபட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 29).இவர் மதுரையில் உள்ள ஒரு கடையில் பூ கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அபிநயபிரியா(20).இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களாகிறது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த வினோத்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.