1,029 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை-அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
1,029 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மதுரை,
1,029 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
அதன்படி மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு 80 மருத்துவர்கள் மற்றும் 250 செவிலியர்கள் உள்ளிட்ட 729 பணியாளர்களுக்கும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் கீழ் 40 மருத்துவர்கள் மற்றும் 75 செவிலியர்கள் உள்ளிட்ட 300 பணியாளர்களுக்கும் என மொத்தம் 1029 பணியாளர்கள் பணிநியமன ஆணைகளை பெற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது;-
மதுரை மாவட்டத்தில் தினமும் 1,500 ஆக இருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் முழு ஊரடங்கு காரணமாக குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆரம்பநிலையில் நோய்த் தொற்றை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காகவே மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 100 ஊராட்சிகளில் மினி கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேலு, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் வெங்கடாச்சலம், துணை இயக்குனர் (சுகாதாரம்) அர்ஜூன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர
Related Tags :
Next Story