மாவட்ட செய்திகள்

கோவில் குளத்தில் மூதாட்டி பிணம் + "||" + Grandmother's body in the temple pool

கோவில் குளத்தில் மூதாட்டி பிணம்

கோவில் குளத்தில் மூதாட்டி பிணம்
கோவில் குளத்தில் மூதாட்டி பிணம்.
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சாரதா (வயது 75). குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் சிவன் கோவில் குளத்தில் தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் சாரதா கிடைக்கவில்லை. மேலும் கோவில் குளத்தின் அருகே அவர் கொண்டு சென்ற குடம் மட்டும் இருந்தது.


இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பூந்தமல்லி தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதாவை குளத்தில் இருந்து பிணமாக மீட்டனர். சாரதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் கோவில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எவ்வாறு இறந்தார்? என்று விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டி தீக்குளித்து சாவு
ஆழ்வார்குறிச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
2. மூதாட்டி வெயிலுக்கு பலி
கோடை வெயிலின் தாக்கத்தால் மூதாட்டி இறந்ததார்
3. கடற்கரையோரத்தில் முதியவர் பிணம்
கடற்கரையோரத்தில் முதியவர் பிணம்.
4. ஊரடங்கால் தவித்த மூதாட்டி
ஊரடங்கால் பஸ் கிடைக்காமல் மூதாட்டி தவித்தார்.
5. ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் ஆதிகேசவ பெருமாள் நகர் கூட்டு சாலையில் கம்ப கால்வாயில் துர்நாற்றம் வீசியது.