நிவாரண பொருட்கள்


நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 31 May 2021 12:44 AM IST (Updated: 31 May 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள்

மதுரை
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மதுரைக்கோட்டம் சார்பில், மதுரை அரசு மருத்துவமனைக்கும், தோப்பூர் அரசு கோவிட் கேர் மையத்திற்கும் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள கொரோனா நிவாரண பொருட்களை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அனிஷ்சேகரிடம், வெங்கடேசன் எம்.பி., அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. முதன்மைக் கோட்ட மேலாளர் செந்தூர்நாதன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் சுவாமிநாதன், மீனாட்சி சுந்தரம், ரமேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story