கோவில் உண்டியலை உடைத்து திருட்டு; 3 பேர் கைது
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு; 3 பேர் கைது
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முனுசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் சிந்துபட்டி போலீசார் புகார் செய்தனர். விசாரணையில் பழனிபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 23), பாலகிருஷ்ணன் (22), முத்துப்பாண்டி(23) ஆகியோர் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.12 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story