வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்


வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
x
தினத்தந்தி 31 May 2021 1:07 AM IST (Updated: 31 May 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

மதுரை
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 26). இவர் மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் மதுரை திருநகர் சுரேஷ்குமார்(21), செல்லூர் பிரபாகரன்(21) ஆகியோரிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதற்கான வட்டியை செலுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பணம் கட்டவில்லை. இதுகுறித்து கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்த வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்கள். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்

Next Story