கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 31 May 2021 1:07 AM IST (Updated: 31 May 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விரகனூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கல்யாணி பிரபாகரன், ஊராட்சி செயலர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமையொட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமூக இடைவெளியுடன் ஒவ்வொருவராக அனுப்பி தடுப்பூசி செலுத்தப்பட்டது. வலையன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சிவக்குமார், சுகாதாரவட்டார மேற்பார்வையாளர் தங்கசாமி ஆகியோர் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதில் மொத்தம் 805 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சியில் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் சீமான் தலைமை தாங்கினார்.  வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சங்கரி முன்னிலை வைத்தார். ஊராட்சி மன்ற செயலாளர் குமரன் வரவேற்று பேசினார். இதில் ஊராட்சி துணைத்தலைவர், தூய்மை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story