காஞ்சீபுரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின்படி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின்படி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காஞ்சீபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏழை, எளிய பழங்குடியின மக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி வாழ்வாதாரம் இழந்து அவதிப்பட்டு வரும் பழங்குடி இன மக்களுக்கு உதவி செய்ய முயற்சி மேற்கொண்டார்.
அவரது ஏற்பாட்டின் பேரில் செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, பிள்ளையார் பாளையம், பஞ்சுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த 59 பழங்குடியின குடும்பத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், அவர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று சமுக இடைவெளியுடன் போலீஸ்துறையின் சார்பில் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story