புழல் சிறையில் கொரோனாவுக்கு பெண் ஊழியர் பலி


புழல் சிறையில் கொரோனாவுக்கு பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 11:14 AM IST (Updated: 31 May 2021 11:14 AM IST)
t-max-icont-min-icon

புழல் சிறையில் கொரோனாவுக்கு பெண் ஊழியர் பலி.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் தேன்மொழி (வயது41). இவர், கொரோனா தொற்று பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

பலியான தேன்மொழிக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சிறை வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.

அதேபோல் புழல் சிறையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த குன்றத்தூர் மலையம்பாக்கம் பகுதியை ேசர்ந்த ரமேஷ் (47) என்பவரும் கொரோனாவுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

Next Story