மாவட்ட செய்திகள்

சோழவந்தான் பகுதியில் நாளை மின்தடை + "||" + Power outage in Cholavanthan area tomorrow

சோழவந்தான் பகுதியில் நாளை மின்தடை

சோழவந்தான் பகுதியில் நாளை மின்தடை
சோழவந்தான் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் கோட்டத்துக்கு உட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையம் மற்றும் சமயநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் காடுபட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், குருவித்துறை, பரவை, ஏ.பி.ஏ காலனி, சரவணா நகர், மங்கையர்க்கரசி கல்லூரி பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று சமயநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.