விவசாயிகளுக்கு மானியத்தில் இடு பொருட்கள்


விவசாயிகளுக்கு மானியத்தில் இடு பொருட்கள்
x
தினத்தந்தி 31 May 2021 6:34 PM GMT (Updated: 31 May 2021 6:34 PM GMT)

மானாவாரி நிலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.

மதுரை,ஜூன்
மானாவாரி நிலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
மானாவாரி வளர்ச்சி இயக்க திட்டம்
மானாவாரி நிலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க வேளாண்மை துறை சார்பில் நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
இது குறித்து டி.கல்லுப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் விமலா கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்க திட்டம் டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் 800 எக்ேடர் பரப்பளவில் தொகுப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு தொகுப்புக்கு 100 எக்ேடர் வீதம் 8 தொகுப்புகளில் 800 எக்ேடர் பரப்பளவில் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மானியம்
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ததற்கு மானியமாக ரூ.500 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும், அவர்கள் நிலத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் விதை, உயிர் உரம் போன்ற இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
 மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story