அந்தியூர் வாரச்சந்தை அருகே காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பரபரப்பு
அந்தியூர் வாரச்சந்தை அருகே காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தை அருகே காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாரச்சந்தை
அந்தியூர் வாரச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று காய்கறிகள் விற்பனை நடைபெறும். இதற்காக அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களுடைய தோட்டத்தில் விளைந்த காய்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக அந்தியூர் வாரச்சந்தை நடைபெறவில்லை. எனினும் அந்தியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பலரும் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வந்தனர்.
கூட்டம்
இந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளை விற்பனை செய்வதற்காக வாகனங்களில் ஏற்றி நேற்று காலை 6 மணி அளவில் அந்தியூர் வாரச்சந்தை அருகே கூடினர்.
அவர்களிடம் இருந்து காய்கறிகளை வாங்கி செல்ல மொத்த வியாபாரிகளும் ஏராளமானோர் அங்கு கூடினர். ஒரே நேரத்தில் அதிகமாேனார் கூடியதால் அந்த பகுதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பரபரப்பு
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் இங்கு கூட்டம் கூடி காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது. அந்தியூரில் ஒவ்வொரு வீதியாக சென்று காய்கறிகளை விற்பனை செய்யுங்கள் என்றனர்.
இதைத்தொடர்ந்து 7 மணி அளவில் அங்கிருந்தவர்கள் தங்களுடைய காய்கறிகளை வீதிகளில் விற்பனை செய்வதற்காக வாகனங்களை எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story