கொரோனா நிவாரண பொருட்கள்


கொரோனா நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 1 Jun 2021 2:26 AM IST (Updated: 1 Jun 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

மதுரை, ஜூன்.1-
கொரோனா தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும் ஏழைகளுக்கும், பொதுமக்களுக்கும் மதுரை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் வி.பி.ஆர். செல்வகுமார் மற்றும் திரைப்பட இயக்குனர் வீரமணி ஆகியோர் சார்பில் நேற்று கொரோனா நிவாரண பொருட்கள் மதியம் உணவு மற்றும் முக கவசங்கள், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அங்குள்ள பொதுமக்களுக்கு முக கவசம், மதிய உணவு, கபசுரக் குடிநீர் கொடுத்தனர். நிகழ்ச்சியில் இணைச்செயலாளர் வகிலா ஜாஸ்மின், நிர்வாகிகள் ராமு, அய்யப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக மறைந்த தே.மு.தி.க தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் சிவ முத்துக்குமார் உருவப்படத்தை திறந்து வைத்து நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Next Story