ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக 40 மளிகை கடைகள் திறப்பு


ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக  40 மளிகை கடைகள் திறப்பு
x

ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக 40 மளிகை கடைகள் திறக்கப்பட்டன.

ஈரோடு
ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக 40 மளிகை கடைகள் திறக்கப்பட்டன.
வீடுகளுக்கே வினியோகம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலமாக கடைக்காரர்கள் ஆர்டர் பெற்று வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று பொருட்களை வினியோகம் செய்து கொள்ளவும், நடமாடும் கடைகளுக்கு தேவையான பொருட்களை விற்கவும் முதல் கட்டமாக 40 மொத்த மளிகை கடைகளை திறந்து கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள மளிகை கடைகள் நேற்று திறக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் வைத்து பொதுமக்களுக்கு சில்லரை விற்பனை செய்யக்கூடாது என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்றுள்ள நடமாடும் கடை வியாபாரிகளுக்கு மட்டுமே பொருட்களை விற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
நடமாடும் மளிகை கடைகள்
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், மளிகை பொருட்கள் சரியாக மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே கூடுதலாக நடமாடும் மளிகை கடைகள் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி சிறிய வாகனங்கள் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாநகரில் நேற்று பி.பி.அக்ரஹாரம் உள்பட பல்வேறு இடங்களில் நடமாடும் காய்கறிகள் வாகனங்கள் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

Next Story