வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்


வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 1 Jun 2021 3:00 AM IST (Updated: 1 Jun 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

முதியவரிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்.

மதுரை, ஜூன்.1-
மதுரையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் செல்போன் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை பிடிக்க போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் கோமதிபுரம் 3-வது தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 60) என்பவர் மேலமடை பகுதியில் இரவு நேரத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்கள். அவர்களை அந்த பகுதி மக்கள் விரட்டி சென்று பிடித்து அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அண்ணாநகர் செண்பகதோட்டம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (21), செக்சன்ஆபிஸ்ரோடு பகுதியை சேர்ந்த யோகேஷ் (20) என்பதும், அவர்கள் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story