மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் ஆதரவற்ற முதியோருக்கு இலவச உணவு + "||" + food

ஊரடங்கில் ஆதரவற்ற முதியோருக்கு இலவச உணவு

ஊரடங்கில் ஆதரவற்ற முதியோருக்கு இலவச உணவு
ஊரடங்கில் ஆதரவற்ற முதியோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.
மதுரை, 
மதுரை உத்தங்குடியில் ஆதரவற்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிறந்தநாள், நினைவுநாள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அவ்வப்போது உணவு வழங்கி வந்தனர். இதற்கிடையே, தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் வடக்கு மாவட்ட தலைவர் சீனிஅகமது ஆலோசனையின் பேரில், மனிதநேய மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமையில், மேலூர் முகமதியாபுரம் சலீம் சார்பில் முதியோர் இல்லத்துக்கு நேற்று மதிய உணவாக பிரியாணி ஏற்பாடு செய்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மேலூர் த.மு.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.