இலவச ஆயுர்வேத மருந்து வழங்கும் முகாம்


இலவச ஆயுர்வேத மருந்து வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 31 May 2021 9:59 PM GMT (Updated: 31 May 2021 9:59 PM GMT)

கொரோனாவை தடுக்க இலவச ஆயுர்வேத மருந்து வழங்கும் முகாம் நடந்தது.

மதுரை, 
கே.கே.நகர் பகுதியில் உள்ள கேரள ஹெல்த்கேர் ஆயுர்வேதிக் கிளினிக் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு இலவச ஆயுஷ்க்வாத் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. அதில் போக்குவரத்து துணை கமிஷனர் சுகுமார், உதவி கமிஷனர்கள் திருமலைக்குமார், மாரியப்பன் ஆகியோர் ஆயுஷ்க்வாத் மற்றும் கபசுரபொடி பாக்கெட்டுக்களை போலீசாருக்கு வழங்கினார்கள்.
இது குறித்து டாக்டர் பிரமோத் கூறும் போது, தீவிரமாக பரவி வரும் கொரோனா 2-வது அலையில் பலர் நுரையீரல் பாதிப்பில் சிக்கியுள்ளனர். அதனை தவிர்க்க மத்திய அமைச்சகம் எங்களின் மூலிகை மருந்தான ஆயுஸ்க்வாத் மருந்தை பரிந்துரை செய்துள்ளனர். இந்த பவுடரை நன்கு காய்ச்சி கசாயமாக காலையில் சாப்பிட்டபின் ஒரு வேளை அருந்தினால் போதும். மேலும் காய்ச்சல், செரிமான கோளாறு உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன் அருந்த வேண்டும். இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகை பொடி என்றார். இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஆயுர்வேத கிளினிக் நிர்வாக இயக்குனர் மாரீஸ்வரி, நிறுவன மேலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story