செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலுள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி கிருஷ்ணன், பாபு, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ் குமார், கண்காணிப்பாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆராமுதன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம், ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன், வட்டார மருத்துவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story