திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையின்றி முகாம்கள் நடைபெற 10,500 தடுப்பூசிகள் வந்தது


திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையின்றி முகாம்கள் நடைபெற 10,500 தடுப்பூசிகள் வந்தது
x
தினத்தந்தி 2 Jun 2021 11:57 PM IST (Updated: 2 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையின்றி முகாம்கள் நடைபெற 10,500 தடுப்பூசிகள் வந்தது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினமே திருவண்ணாமலை மாவட்டத்தில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் தீர்ந்து விட்டது.

 ‘கோவேக்சின்’ தடுப்பூசி குறைந்த அளவில் இருப்பு இருந்ததை வைத்து நேற்று காலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையின்றி தடுப்பூசி போடும் பணி நடைபெற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசுக்கு தடுப்பூசி வழங்க தொடர்ந்து வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. 
அதனைத் தொடர்ந்து நேற்று காலை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 10 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசிகள் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நேற்று காலை 9 ஆயிரம் ‘கோவிஷில்டு’ தடுப்பூசிகளும், 1,500 ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து தடையின்றி தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசிகள் தீர்வதற்கு முன்னர் தேவையான தடுப்பூசிகள் அனுப்ப அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் தடையின்றி தொடர்ந்து நடைபெற சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Next Story