10 ஆயிரம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள்
திண்டுக்கல் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 1,000 கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களும் வந்தன.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால் ஒருசில மருத்துவமனைகளில் மட்டும் மிகவும் குறைந்த அளவிலான நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்த வகையில் நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 1,000 கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களும் வந்தன.
அதில் திண்டுக்கல்லுக்கு 5 ஆயிரத்து 500 டோஸ்களும், பழனிக்கு 4 ஆயிரத்து 500 டோஸ்களும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story