சென்னிமலையில் கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய மற்றொரு நாய்க்குட்டி
சென்னிமலையில் கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டியுடன் மற்றொரு நாய்க்குட்டிகொஞ்சி விளையாடியது.
சென்னிமலையில் காட்டூர் ரோட்டில் பன்னீர்செல்வம் என்பவர் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் வளர்த்து வந்த நாய்க்குட்டி கடைக்குள் கட்டப்படாமல் விடப்பட்டுள்ளது. கம்பிவேலி போட்ட கடைக்குள் இருக்கும் அந்த நாயை பராமரிப்பதற்கென 2 பேர் உள்ளனர். அவர்கள் நாய்க்கு தினமும் 3 வேளையும் சாப்பாடும், பாலும் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று அந்த வழியாக ஒருவர் தான் வளர்த்து வரும் நாய்க்குட்டியோடு நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கட்டிட பொருள் விற்பனை செய்யும் கடைக்குள் இருந்த நாய்க்குட்டி நடைபயணம் சென்றவரோடு சென்ற நாய்க்குட்டியை பார்த்து குரைத்தது.
பின்னர் அந்த நாய்க்குட்டி கடையை நோக்கி சென்றது. அங்கு கடைக்குள் இருந்த நாய்க்குட்டியுடன் கம்பி வேலிக்கு இடையே கொஞ்ச தொடங்கியது. இரு நாய்க்குட்டிகளும் அன்புடன் நலம் விசாரித்து கொண்டது போல் கொஞ்சி விளையாடியது.
இதனை அந்த வழியே சென்றவர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். நடைபயணம் சென்றவரும் தனது நாய்க்குட்டி கம்பி வேலிக்கு இடையே மற்றொரு நாய்க்குட்டியுடன் கொஞ்சுவதை பார்த்துவிட்டு தனது நாய்க்குட்டியை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்.
Related Tags :
Next Story