பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சென்னிமலை
ஈரோடு மாவட்டம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சென்னிமலையில் நடந்த விழாவுக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் எஸ்.எம்.ராமசாமி முன்னிலை வகித்தார். இதையொட்டி கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவும், சென்னிமலை போலீசாருக்கு முக கவசம், கிருமி நாசினி, கையுறை மற்றும் இனிப்புகள் ஆகியவையும் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மா.ஈஸ்வரமூர்த்தி, எம்.துரைசாமி, கே.அன்பழகன், பேரூர் நிர்வாகி கலைவாணி தங்கமுத்து மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கருணை பிரகாஷ், அசோக், கொடுமணல் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் சி.பிரபு தலைமையில் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள ஏழை- எளிய பொதுமக்கள் 10 ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் பவானி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.துரைராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. சார்பில் நேரு நகரில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.
இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை- எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.சி.பி.இளங்கோ, அரியப்பம்பாளையம் பேரூர் கழக மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.
விழாவில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொளப்பலூர்
கொளப்பலூர் பஸ் நிலைய திடலில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கொளப்பலூர் பேரூர் கழக செயலாளர் ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.சதாசிவம், பேரூர் பொதுக்குழு உறுப்பினர் அன்பரசு, ஒன்றிய பிரநிதிகள் அருள்மணி, கண்ணன், குமார், பச்சியப்பன், முத்து, குறிஞ்சி ஆறுமுகம் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






