ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை; அதிக பட்சமாக கவுந்தப்பாடியில் 55.3 மி.மீ பதிவானது


ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை; அதிக பட்சமாக கவுந்தப்பாடியில் 55.3 மி.மீ பதிவானது
x
தினத்தந்தி 4 Jun 2021 1:59 AM IST (Updated: 4 Jun 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. அதிக பட்சமாக கவுந்தப்பாடியில் 55.3 மி.மீட்டர் மழை பதிவானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. அதிக பட்சமாக கவுந்தப்பாடியில் 55.3 மி.மீட்டர் மழை பதிவானது.
இடி-மின்னலுடன் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்த பிறகும் கடந்த 2 நாட்களாக 100 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயில் கொளுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் ஈரோட்டில் மட்டும் மழை பெய்யவில்லை. அவ்வப்போது சில தூறல்கள் விழுந்து ஏமாற்றியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்தது. ஆனால் அது அப்படியே நின்று விட்டது. பின்னர் நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் பலத்த காற்று மற்றும் இடி- மின்னலுடன் மழை தொடங்கியது. சாரலாக தொடங்கிய மழை சற்று நேரத்தில் வலுத்தது. பின்னர் வலுத்தும், மிதமாகவும் சுமார் 2 மணி நேரம் இந்த மழை பெய்தது. ஈரோடு மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசியது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இது கனமழையாக பெய்தது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. பின்னர் விடிய, விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோட்டில் 15 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 55.3 மி.மீட்டர் பதிவானது. குறைந்தபட்சமாக சென்னிமலையில் 3 மி.மீட்டர் மழை பெய்தது.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை விவரம் மி.மீட்டர் அளவில் வருமாறு:-
கவுந்தப்பாடி - 55.3
கொடிவேரி - 32
பவானி - 23
குண்டேரிப்பள்ளம் - 23
அம்மாபேட்டை -21.4
கோபி -19.4
சத்தியமங்கலம் - 19
ஈரோடு - 15
வரட்டுப்பள்ளம் - 7.4
பவானிசாகர் - 6.6
பெருந்துறை - 4
சென்னிமலை - 3

Related Tags :
Next Story